சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு வாகனத்தில் நண்பரோடு நான் பயணித்தேன். தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் நோக்கி விரைந்தது வண்டி.
காலை உணவு அநேகமாக ஜீரணம் ஆகி விட்டது. மதிய உணவுக்கு இன்னும் நேரம் இருந்தது. இடையில் ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிடலாம் என்ற எண்ணம் எங்களுக்குள் மேலோங்கியது.
“வண்டியை நிதானமா ஓட்டுங்க, ஏதாவது நல்ல கடையா இருந்தா நிப்பாட்டுங்க” என்று சாரதியிடம் சொன்னேன். அவரும் அதேபோல ஒரு கடையைக் காட்டி “இங்கே சாப்பிடலாமா?” என்று கேட்டார். “வேண்டாம், தள்ளிப் போங்க” என்று சொன்னேன்.
99 கிலோ மீட்டரைத் தாண்டி சில கிலோ மீட்டர் பயணித்து விட்டோம். அடுத்தடுத்த கடைகளிலும் அதேபோல நடந்தது. சற்று நேரத்தில் நான் எதிர்பார்த்தபடி ஒரு கடை வந்தது. வண்டியை ஓரங் கட்டச் சொன்னேன்.
சாரதிக்குப் பலத்த சந்தேகம். “முன்னாடி பார்த்தது எல்லாமே பெரிய கடை. இந்த கடைக்குப் பேர் கூட வைக்கல. அவ்ளோ சின்ன கடை. ஆனா இங்கே நிறுத்தச் சொல்றீங்க. ஏன்?” என்று கேட்டார்.
சிரித்துக் கொண்டே அங்கு தொங்கிய த்ருஷ்டி பொம்மையைச் சுட்டுக் காட்டினேன். அவருக்கு விளங்கவில்லை. நான் விளக்கத் தொடங்கினேன்.
“அதாவதுங்க, கடவுள் நம்பிக்கை உள்ளவங்க கடையில மட்டுமே வியாபாரம் பண்றது என் வழக்கம். அதனாலதான் எந்த ஒரு கடையிலும் ஸ்வாமி படம், திருஷ்டி அடையாளம் ஏதாவது இருக்கான்னு பார்ப்பேன். இல்லாட்டி அந்தக் கடையைத் தவிர்ப்பேன்” என்று சொன்னேன்.
“மங்களகரமான அடையாளம் ஏதும் இல்லாம இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் பக்தி இருக்குமே!” என்று கேட்டார் சாரதி. “பக்தி இருந்தா மட்டும் போதாதுங்க. அதை வெளிப்படுத்தத் துணிச்சலும் இருக்கணும்” என்று சொன்னேன்.
“ஹிந்துக் கடைகளில் மட்டும் தான் நான் பொருள் வாங்குவேன்” என்பதை அவர் புரிந்து கொண்டு விட்டார். ஒரு மதவாதியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற மருட்சி அவர் கண்ணில் தென்பட்டது.
“நான் யாருக்கும் எதிரானவன் இல்லைங்க. ஆனா என் சமுதாயம் நல்லா இருக்கனும்னு நினைக்கிறதும் தப்பு இல்லையே. சாமிலயும் சரி, சாப்பாட்டுலயும் சரி கலப்படம் இருக்கக் கூடாதுங்க” என்று சொல்லி முடித்தேன்.
“அடப் போங்க! டீ, காபில என்னங்க கலப்படம் இருக்கப் போகுது?” சலித்துக் கொண்டார் சாரதி.
அண்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் நம்மைச் சுற்றி நடப்பது எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு அப்பாவியாக இருந்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு (செப் 13) காஸியாபாத் கடை ஒன்றில் குளிர்பானத்தில் மூத்திரம் கலந்து கையும் களவுமாக பிடிபட்ட ஆமிர் கான் என்ற நபரைக் காவல்துறை கைது செய்தது.
“எதுவா இருந்தாலும் எச்சில் துப்புவானுங்க சில பேர். நமக்கு எதுக்குங்க அப்படி ஒரு கேவலம். அந்த மாதிரி கடைங்களுக்கு நான் போறது இல்ல.” சமீபத்திய சில செய்திகளை அவருக்குப் படித்துக் காட்டினேன். அரண்டு விட்டார். “என் வேலை வண்டி ஓட்டறதுங்க. எந்த இடத்துல நிப்பாட்டச் சொல்றாங்களோ நிப்பாட்டுவேன். அவங்க எந்தக் கடையில சாப்பிடறாங்களோ, அதே கடையில தான் நானும் சாப்பிடுவேன். ஆனா இனிமே கவனமா இருக்கனும்னு தெரியுது” பாவமாகச் சொன்ன சாரதியின் முகத்தில் பீதி குறையவில்லை.
பயணம் தொடர்ந்தது. சாரதி சிந்தித்தபடியே சீரான வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். உடன் பயணிக்கும் நண்பர் பேச்சைத் தொடர்ந்தார்.
உணவுப் பதார்த்தங்கள் விற்பனை செய்யும் எந்த ஒரு கடையும் உணவுப் பாதுகாப்பு தரச் சான்றிதழ் (FSSAI Certificate) பெற்றிருக்க வேண்டும். அதை வாடிக்கையாளர் கண்ணில் படுமாறு வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். அதில் கடை உரிமையாளரின் பெயரும் இடம் பெற்றிருக்கும். இது காலாகாலத்திற்கும் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் என்பதை ஊடகங்கள் சொல்ல மறுக்கின்றன.
“உ.பில ஆடி மாசம் கன்வர் யாத்ரா போற வழியில உணவகங்களோட பெயர்ப் பலகைகளில் உரிமையாளர் பேர் எழுதச் சொன்னாங்களே, அது நல்ல முடிவு” என்றார் நண்பர்.
“ஆனா, மதத் தொடர்புள்ள உத்தரவுன்னு சொல்லி உச்ச நீதிமன்றம் அதுக்குத் தடை போட்டுடுச்சு. பொதுவான உத்தரவா மாநிலம் முழுக்க அமல்படுத்தி இருந்தா நீதிமன்றம் குறை சொல்லி இருக்காது. அதையே நாடு முழுக்க விரிவுபடுத்தி இருக்கலாம்” எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
“ஹிமாச்சல் பிரதேச மந்திரி விக்ரமாதித்தன் கூட அதே மாதிரி கடைகள்ல பேர் போடச் சொன்னதா ஒரு செய்தி வந்ததே!” என வினவினார் நண்பர்.
“வழக்கமா வேதாளம் தான் முருங்கை மரம் ஏறும். இந்த விஷயத்துல விக்ரமாதித்தனே மரம் ஏறிட்டார். பல்டி அடிக்காம இருந்திருந்தா நல்லது!” என்றேன்.
“அது அவங்க விவகாரம். நம்ம ஊர்ல கடைக்காரரோட பேரை எழுதுறது அவசியமா?” இது சாரதியின் கேள்வி.
“நிச்சயமா அவசியம் தான். பொதுவான பேரா இருக்கும். உள்ளே போனா ஒரு மார்க்கமா இருக்கும். வெளியே ஹிந்து பேரா இருக்கும். உள்ளே வேற மார்க்கமா இருக்கும். பேரை வெளிப்படையா எழுதிட்டா எந்தக் குழப்பமும் இல்லையே!”
“உணவக உரிமையாளர் யார்? விற்கப்படும் பண்டத்தின் தரம் என்ன? அங்கு எதை எதிர்பார்ப்பது? எதை எதிர்பார்க்கக் கூடாது? இவற்றைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாடிக்கையாளரின் உரிமை.” உரிமைக் குரல் எழுப்பினேன் நான்.
ஸூர்யன் அஸ்தமித்த வேளை திண்டிவனத்தில் இருந்து திரும்பும் பொழுது எந்தக் கடையில் வண்டியை நிறுத்த வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. “காஃபி மட்டும் சாப்பிடலாமா?” என்று கேட்டபடி அவராகவே வண்டியை ஓரம் கட்டினார் சாரதி.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!