வண்ணக் கொடி ஏந்தி யாத்திரை நடத்திய சந்தன்குப்தா படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் 28 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், குறிப்பிட்ட சில என்.ஜி.ஓக்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது.
கோத்ரா கலவரத்துக்குப் பிறகு ஏறத்தாழ 23 ஆண்டுகள் மதக்கலவரத்தை இந்த என்.ஜி.ஓ.க்கள் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன. ஹிந்துக்களுக்கு எதிரான செய்திகளை பரப்புவது, முஸ்லிம்களுக்கு ஆதரவான செய்திகளைப் பரப்புவது, உண்மைக்குப் புறம்பானவற்றை இட்டுக்கட்டி ஹிந்துத்துவ செயல்பாட்டாளர்களை அவமதிப்பது, இஸ்லாமிய வெறியர்களின் மோசமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த வரிந்துகட்டிக் கொண்டு பரப்புரையில் ஈடுபடுவது போன்றவை இந்த என்.ஜி.ஓ.க்களின் நடவடிக்கைகளாக உள்ளன. இவை நிதிரீதியாகவும், சட்டரீதியாகவும் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றன. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ரத்தக்களரியை ஏற்படுத்தி ஆதாயத்தை அறுவடை செய்ய துடிக்கின்றன. குறிப்பிட்ட 6 என்.ஜி.ஓ.க்கள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (சி.ஜே.பி):
குடிமக்களுக்கான நீதி, அமைதி என்ற பெயர் அருமையாக இருக்கிறது. ஆனால் இதன் பெயருக்கும் இந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இது மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக இந்த அமைப்பு சொல்லிக் கொள்கிறது. இதை டீஸ்டா செதல்வாட் உருவாக்கியுள்ளார். அவரது கணவர் ஜாவேத் ஆனந்துக்கும் இதில் முக்கிய பங்குண்டு.
சந்தன் குப்தா படுகொலை செய்யப்பட்ட காஸ்கஞ்ச் விவகாரம் தொடர்பாக உண்மை அறிக்கை என்ற பெயரில் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை இந்த அமைப்பு வெளியிட்டது. ஹிந்துக்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் இந்த உண்மைக்குப் புறம்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்றம், இந்த அமைப்பின் அறிக்கையை கடுமையாக விமர்சித்தது. இது பொய் மூட்டை என்று சாடியது. சிஜேபி, சர்பங் இந்தியா என்ற சார்பு அமைப்பையும் கொண்டுள்ளது. பொய்யான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவது மட்டுமே சர்பங் இந்தியாவின் பிரதான பணியாகும்.
இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (ஐஏஎம்சி):
இந்த அதிபயங்கர இஸ்லாமிய அமைப்பு ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. அதுமட்டுமல்லாமல் லஷ்கர் – இ – தொய்பா, ஜமாத் – இ – இஸ்லாமி போன்ற அமைப்புகளுடனும் நெருக்கம் கொண்டுள்ளது. இதன் நிறுவனர் ஷேக் உபைத், முக்கிய உறுப்பினர் அப்துல் மாலிக் முஜாகித் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு இந்த அமைப்பு அடைக்கலம் கொடுத்துள்ளது.
பீப்புல்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ் (பி.யு.சி.எல்):
சிவில் உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு மாவோயிஸ்டுகளால் இயக்கப்படுகிறது. நக்சல்களை இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு அவ்வப்போது செய்தி வெளியீடுகளையும் வெளியிட்டு வருகிறது. உண்மைக்குப் புறம்பான கண்ணோட்டத்திலேயே விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது. ஹிந்துக்களை நிந்திப்பதற்காக எந்த அளவுக்கும் செல்ல இந்த அமைப்பு தயங்கியதே இல்லை,.
சவுத் ஏசியா சாலிடாரிட்டி குரூப் (எஸ்.ஏ. எஸ்.ஜி):
தெற்கு ஆசிய உறுதிப்பாட்டுக் குழு என்ற இந்த அமைப்பின் மையம் இங்கிலாந்தில் உள்ள போதிலும் பாரதத்திலும் இதன் நடவடிக்கைகள் உள்ளன. 1987ல் அம்ருத் வில்சன், கல்பனா வில்சன் ஆகியோரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 2022ல் இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறைக்கு ஹிந்துக்களே காரணம் என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டியது. இந்த அமைப்பில் இலங்கையிலும், பாரதத்திலும் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நிர்மலா ராஜசிங்கமும் அங்கம் வகிக்கிறார். எஸ்.ஏ.எஸ்.ஜி நக்சல்களுக்கு கேடயமாக விளங்குகிறது. பாரதத்துக்கு வெளியே பாரதத்தைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது ஹிந்துக்களுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைப்பதுதான் இந்த அமைப்பின் பிரதான பணியாக உள்ளது.
யுனைட்டட் அகெய்ன்ஸ்ட் ஹேட் (யு.ஏ.ஹெச்):
வெறுப்புக்கு எதிரான அணி என்ற பொருள்படும். இந்த கூட்டமைப்பு பாரதத்தின் ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசவிரோத நடவடிக்கைளுக்கு ஆதரவு அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தை தூண்டி விட்டதில் இதற்கு முக்கிய பங்குண்டு.
ரிகாய் மஞ்ச்:
லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. முகமது சோகிப் இதன் நிறுவனர் ஆவார். முஸ்லிம் குற்றவாளிகளுக்கு சட்டரீதியான உதவியை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
ஜமாத் உலமா இ ஹிந்த்:
இந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புடையது. இதன் சட்டப்பிரிவு 2007ல் தொடங்கப்பட்டது. இது சட்ட உதவி அளித்ததன்பேரில் 2007ல் மட்டும் 192 நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய என்.ஜி.ஓ.க்கள் பாரதத்தையும், ஹிந்துத்துவத்தையும் அவமதிப்பதற்காகவே இயங்கி வருகின்றன. இவற்றின் மீது உரிய நடவடிக்கையை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே பொதுநல ஆர்வலர்களின் ஒருமித்த வேண்டுகோள்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி