இது நமக்கு நல்ல நேரம்

சீனா மற்றும் பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துவிட்டது அமெரிக்கா, அதிலும் பாகிஸ்தான் வாயில் துணி அல்லது வெடிகுண்டு வைத்து அழுது கொண்டிருக்கின்றது

சீனாவுக்கான அமெரிக்க தூதர் விஷயத்தை செய்திருக்கின்றார், இது அமெரிக்க அரசின் நிலைப்பாடு என்பதால் விஷயம் பெரிதாகின்றது

அதாவது சீனாவுக்கான அமெரிக்க தூதராக நிக் பண்ஸ் நியமிக்கபட்டார், அமெரிக்க சட்டபடி அதிபரால் நியமிக்கபடும் ஒருவர் அந்த பணிக்கு தகுதியானவரா என அமெரிக்க செனட் சோதிக்கும்

அப்படி நிக் பென்ஸிடமும் கேள்வி கேட்டார்கள், அங்கு அவர் சொன்ன பதில்தான் இன்று சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அடிவயிற்றை கலக்கும் செய்தி

என்ன சொன்னார் பென்ஸ்

“சீனா அண்டை நாடுகளையெல்லாம் ஆக்கிரமித்து வம்பு செய்து கொண்டிருக்கின்றது, மேலாக நம் நெருங்கிய நட்புநாடு இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து இந்தியாவினை வம்புசண்டைக்கு இழுக்கின்றது, இந்தியா நல்ல நாடு அது ஒருநாளும் வீணாக சண்டைக்கு செல்லாது ஆனால் சீனா நம் நட்பு நாடான இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றது

நட்புநாடு எனும் அடிப்படையில் நாம் இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவினை அடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்”

போதாதா?

சீனா கடும் கோபத்தில் கொந்தளித்தது, நேற்றே எங்கள் நாட்டில் கொரோனா 3.0 வந்துவிட்டது என விமான நிலையங்களை மூடுகின்றது, அதாவது புதிய அமெரிக்க தூதரை மிரட்டுகின்றார்களாம்

பாகிஸ்தானோ மனதுக்குள் கருவி கொண்டிருக்கின்றது, 2010க்கு முன்புவரை அவர்கள்தான் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தார்கள், இனி அது இல்லை என்றாயிற்று அனேகமாக எப்16 விமானங்கள் வரை திரும்ப பெறபடலாம் என்பதால் அந்த விமானங்களை தடவி தடவி அழுது கொண்டிருக்கின்றது அத்தேசம்

விஷயம் இதுதான்

எல்லையில் சீனாவுடன் போர்சூழல் நிலவும் நிலையில் இந்தியா எம் நட்பு நாடு என அறிவித்து இந்தியா மேல் சீனா கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என எச்சரித்திருகின்றது அமெரிக்கா, இது நாட்டுக்கு நல்லது

1962 போரிலும் அமெரிக்கா உதவ வந்தது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்கள் எல்லாம் தன்னை விடாது என அஞ்சிய நேரு ரகசியமாக அமெரிக்காவிடம் உதவி கோரினாரே தவிர நேரடியாக கேட்க அஞ்சினார்

காரணம் கம்யூனிஸ்டுகள் அட்டகாசம்

ஆனால் சோவியத் யூனியனும் இந்தியாவினை காக்கவில்லை என்பதுதான் விஷயம், அப்பொழுதும் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் மகா அமைதி எனபதுதான் தேசவிரோதம்

இன்று மோடி கம்பீரமாக அமர்ந்திருக்கின்றார், கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்டனர், அமெரிக்கா இந்தியா எம் நட்பு நாடு என சொல்கின்றது

2006ல் மோடிக்கு விசா இல்லை என சொன்ன வல்லரசு இன்று மோடியினை புரிந்து கொண்டு இந்தியா எங்கள் கூட்டாளி என உலக அரங்கில் தன் நிலைபாட்டை உரக்க சொல்கின்றது, மோடியினை நாங்கள் சரியாக புரிந்து கொண்டோம் என பகிரங்கமாக சொல்கின்றது

ஆனால் தமிழக இம்சைகள்தான் இன்னும் மோடியினை புரிந்துகொள்ளாமல் அழுது கொண்டிருக்கின்றன‌

ஆம், அமெரிக்கனுக்கு யோசனை அதிகம் அறிவும் அதிகம் அவன் புரிந்துகொண்டான், திராவிட இம்சைகளுக்கு ஏது அவ்வளவு சிந்தனை? அது இருந்தால் அவை ஏன் அந்த கும்பலில் இருக்க போகின்றன.

                                                                       – ஸ்டான்லி ராஜன்