இது அவசியமா?

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதற்காக மெழுகு வர்த்திகள், கிறிஸ்துமஸ் ஸ்டார், ஓக் மரம், குடில் என வீடுகள், தேவாலயங்களில் வைக்கப்படும். இதற்காக கோடிக்கணக்கான கிறிஸ்துமஸ் மரங்கள் வெட்டப் படுகின்றன. இதனால், ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் உடலுக்கு தீங்கான நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. இது தீபாவளி பட்டாசின் மாசை விட பலமடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

மாநில அரசு மதவழிப்பாட்டு தலங்கள், மக்கள் கூடுதலுக்கு விதித்திருந்த கொரோனா தொற்று தடைகளை சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக நீர்த்துப் போக வைத்துள்ளது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சூரசம்ஹாரம், வைகுண்ட வாசல் திறப்பு போன்ற விழாக்களில் பரவும் கொரோனா முகரம், கிறிஸ்துமஸ், ஆங்கில புதுவருட கொண்டாட்டங்களின் போது பரவதா, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டிகளில் மாணவர்களுக்கு பரவிய கொரோனா நள்ளிரவு தேவலாய வழிபாடுகளிள் பரவதா?