தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘அண்மையில் வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை பிஹாரைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரைப் பற்றி தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். இதுமட்டுமல்ல, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல தலைவர்களை இதுபோல அவர் பேசியுள்ளார். முதல்வரிடம் சொல்லிவிட்டுதான் கூட்டத்தில் பேசுகிறேன் என்றும் பார்த்து பேசுமாறு முதல்வர் சொன்னதாகவும் கூறியுள்ளார். தி.மு.கவின் அமைப்பு செயலாளர், தி.மு.க ஆளுநரை கொலை செய்யக்கூட தயங்காது என்று பொருள்பட பேசியிருப்பது திமு..கவின் அதிகார திமிரை தெளிவாக உணர்த்துகிறது. ஜனநாயக நாட்டில் ரௌடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை முதல்வர் ஸ்டாலின் பார்த்து கொண்டு, கேட்டு கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநிலத்தின் முதல்நபரான ஆளுநரை அடிப்போம், உதைப்போம், கொலை செய்வோம் என்றெல்லாம் பேசியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பதே தி.மு.கதான் என்பதை உறுதி செய்கிறது. அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டி கொள்ளும் ஸ்டாலின், தனக்கு சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து, உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்தில் ‘ரௌடிகள் லிஸ்டில்’ இடம் பெற வேண்டிய இந்த நபர், ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால் தான் திருந்துவார். இல்லையேல், தி.மு. கவிற்கு ஆபத்து தான். வெட்கக்கேடு தான்” என குறிப்பிட்டுள்ளார்.