மத சார்பற்ற அரசு என கூறும் தமிழக அரசு, கோயிலை நிர்வகிப்பது, அதன் பணத்தில் சொகுசு கார் வாங்குவது, வருமானத்தை எடுத்துக்கொள்வது, 20 பெரிய கோயில்களின் 10 கோடி நிதியை அரசுக்கு தர உத்தரவிடுவது சரியா என நீதிமன்றம் கேட்டுள்ளது. அதற்கு அந்த காலத்து அரசர்கள் செய்ததைதான் நாங்களும் செய்கிறோம் என திமிராக கூறியுள்ளது அறநிலையத்துறை.
இவர்களுக்குத் தெரியுமா, அக்காலத்து அரசர்கள் கோயில்களை எப்படி பாதுகாத்தனர், எவ்வளவு கோயில்களை கட்டினர், எவ்வளவு சொத்துக்களை எழுதி வைத்தனர், கோயில்கள் மூலம் எப்படி கல்வி, கலைகளை வளர்த்தனர் என்று?
ஹிந்து அரசர்கள் மதசார்பற்றோ, ஒருதலை பட்சமாகவோ எப்போதும் நடக்கவில்லை. மாற்று மதத்தினரை கோயில்களில் பணிக்கு அமர்த்தவில்லை, கோயில் பணத்தில் சொகுசு தேர் வாங்க வில்லை, கோயில் நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கவில்லை. கோயிலில் முறைகேடுகளை அனுமதிக்கவில்லை. ஹிந்து மதத்தை கேவலப்படுத்தியதில்லை. யாரையும் கேவலப்படுத்த விட்டதும் இல்லை, கோயில்களுக்கு கொடுத்தனரே தவிர எடுத்தது இல்லை.
படையெடுப்பில் கூட கோயில்களில் கை வைத்ததில்லை. கோயில்களை கட்டினரே தவிர இடித்தது இல்லை. ஆகமங்கள் மதிக்கப்பட்டன, புனிதங்கள் பாதுகாக்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் கூட, திராவிட கட்சிகள் போல ஹிந்து மதத்தில் தலையிடவில்லை என உணர்ந்ததுண்டா தமிழக அரசு?
கோயில் வருமானத்தில் வயிறு வளர்க்கும் அறநிலையத்துறை, ஹிந்து அரசர்களுடன் ஒப்பிட தங்களுக்கு துளியேனும் அறுகதை உள்ளதா என சிந்திக்க வேண்டும்.