அரைவேக்காட்டு வாதம்

முன்னாள் உள்துறை அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவராஜ் பாட்டீல், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோஷினா கிட்வாயின் சுயசரிதை நூலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “முஸ்லிம் மதத்தில் ஜிஹாத் இருப்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. ஜிஹாத் முஸ்ளிம் மதத்தில் மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்துவ மதங்களிலும் இருக்கிறது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஜிஹாத் பற்றி பேசியிருக்கிறார். ‘ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறியும் அதை சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றால் வலிமையைப் பயன்படுத்தலாம்’ என்ற போதனைகள் உள்ளன. இதைத்தான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனுக்கு போதித்தார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மதத்திலும் இயேசு கிறிஸ்து, “நான் இவ்வுலகில் அமைதியை நிலைநாட்ட வந்துள்ளேன் ஆனால் ஒரு வாளுடன் வந்துள்ளேன்” என கூறியுள்ளார்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சிவராஜ் பாட்டீலின் பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவராஜ் பாட்டீல் ஹிந்து வெறுப்பை விதைத்து வாக்குவங்கி அரசியல் செய்வதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது.

இதனிடையே,பொதுமக்களும் சிவராஜ் பாட்டீல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த பேச்சு மூலம் முஸ்லிம்கள் ஜிஹாத்தில் ஈடுபடுகின்றனர் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. பகவான் கிருஷ்ணரும் இயேசுவும் அதனை எங்கு எந்த சூழலில், எந்த பொருளில் சொன்னார்கள், அதன் உண்மை பொருள் என்ன என்பதை சிவராஜ் பாட்டீல் விளக்கவில்லை. சில முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகளும் திட்டமிட்டே செய்யும் ஜிஹாத் பயங்கரவாதம், கொலைகள், குண்டுவெடிப்புகள், பெண்களை ஏமாற்றும் லவ் ஜிஹாத், நிலங்களை மிரட்டி பிடுங்கும் லேண்ட் ஜிஹாத், ஹார்ட் ஜிஹாத் என்ற மக்கள்தொகை ஜிஹாத், அரசு வேலைகளில் ஏமாற்றி சேரும் ஜாப் ஜிஹாத், கல்வி ஜிஹாத், பொருளாதார ஜிஹாத், வரலாறு ஜிஹாத், மீடியா ஜிஹாத், திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் ஜிஹாத், மதச்சார்பற்ற ஜிஹாத் ஆகியவையும் பகவான் கிருஷ்ணரும் இயேசுவும் சொன்னவையும் ஒன்றா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.