அயோத்தி ராமர் கோவிலில், சாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை (22/1/24) மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில், அயோத்தி ராமரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும், ராமரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.