அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்த பிஜி துணை பிரதமர்

அயோத்தி ராமர் கோயிலுக்கு முதன்முறையாக வெளிநாட்டு தலைவர் வருகை தந்து தரிசனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜன. 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நாடு முழுதும் பல்வேறு துறை பிரபலங்கள் பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பிஜி நாட்டின் துணை பிரதமரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான பீமன்பிரசாத், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். முன்னதாக மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமர் கோயில் சென்று ராமரை தரிசித்தார். இக்கோயிலுக்கு வந்தது தனக்கு பெருமை என்றார்.