பணியிடங்களில், பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில், பெண்கள் அவ்வப்
போது சில சீண்டல்களுக்குள்ளாவது மறுப்பதற்
கில்லை. எனினும், பெண் விடுதலைப் போராளி என்று நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டு தர்பார் நடத்தும் தமிழக மாநில அரசில் இதுபோல் நடப்பதைத் தான் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை. லிப்ஸ்டிக் பூசிக்
கொண்டு வந்ததால் சென்னை மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளாராம். இந்த தகவல் அதிர்ச்சி
யளிக்கிறது. இத்தனைக்கும், சென்னை மேயர் கூட பெண்தான்.
சற்று பின்னோக்கிப் பார்க்கும் போதுதான் பெண்களுக்கெதிரான, பெண்களை இழிவு
படுத்தும் சம்பவங்கள் நிறையவே நடந்துள்ள கழக வரலாறு மனக்கண் முன் விரியும்.
சத்தியவாணிமுத்து. அண்ணாதுரை அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர். கருணாநிதி ஆட்சியிலும் மந்திரியாகத் தொடர்ந்தார். அண்ணாதுரை இறந்தபின், ‘ஆதிதிராவிடர்
களை கலைஞர் அரசு மதிப்பதில்லை; ஆதி
திராவிடர் நல திட்டங்களுக்கான நிதியை கலைஞர் மடை மாற்றுகிறார்’ என்று பகிரங்க
மாகக் குற்றம் சாட்டினார். மந்திரி பதவி பறிபோனது!
அண்ணாதுரை இறந்து பல மாதங்
களுக்குப் பின், எங்கே ராணி அண்ணாதுரை அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று மிரண்ட தி.மு.க பெரிய கைகள் அவரை துக்ளக் இதழுக்கு சரிவர ஒரு பேட்டி அளிக்க விடவில்லை.
எம்ஜிஆர் இறந்த பின், ஜானகி அணி திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதாகவும் தி.மு.க அலட்சியப்படுத்தியதாகவும் தகவல் உண்டு. பிறகு இவர்கள் ஜெயலலிதாவை பலவிதமாக அவதூறு செய்ததும் அதே ஜெயலலிதாவிடம் படாத பாடுபட்டதும் ஊரறிந்த சங்கதி.
டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா சொந்தக் கட்சியினரால் அவமானப் படுத்தப்பட்டது, மேடையில் இருக்கை தராமல் புறக்கணிக்கப்பட்டது உள்ளிட்ட மேலும் சில சம்பவங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றதை மறப்பதற்கில்லை.
பொது இடங்களில் கழக விடலைகள் பெண்களை நடத்தும் விதமே அவர்களது தரத்தைக் காட்டிவிடும்:
கட்சி நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்துக்கு வந்திருந்த பெண் போலீஸிடம் தொண்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டனர். வட்டத் தலைவர்கள் குறுக்கிட்டு அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றியது ஊரறிந்த ரகசியம்.
திமுககாரர் செல்வராஜ் என்பவர் பியூட்டி பார்லருக்குள் நுழைந்து, பார்லர் நடத்திய பெண்ணை கீழே தள்ளி காலால் மிதித்து அராஜகம் செய்த வீடியோ பலரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக மட்டுமே நீக்கப்பட்டார்.
ஊராட்சி மன்றங்களிலும் பஞ்சாயத்து போர்டு கூட்டங்களிலும் இதுபோல பெண்களுக்கு எதிரான அலட்சியப் போக்கை நிறையவே பார்க்கலாம்.
ஊராட்சி மன்றத் தலைவி ஒருவரை பட்டியல் சமூகத்தவர் (எஸ்.சி) என்ற காரணத்தால் நாற்காலி வழங்காமல் தரையில் அமரச் செய்ததைக் கண்டு மக்கள் வேதனையுற்றனர். கூட்டணிக் கட்சி எதுவும் வாய் திறக்கவில்லை என்பது வேறு விஷயம்.
பஞ்சாயத்து துணைத் தலைவர் தன்னை எப்போதுமே ஜாதியைச் சொல்லி ஏளனப்
படுத்துவதாகவும் நிர்வாகத்தில் ஒத்துழைக்க மறுப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கூட திண்டிவனம் மாவட்டம் ஔவையார்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவி மகாலட்சுமி விழுப்புரம் எம். பியான ரவிக்குமாரிடம் புகாரளித்தார். புகார் என்ன ஆனது?.
பொது நிகழ்ச்சியொன்றில் மேயர் பிரியாவைக்கூட இழுத்து அப்புறப்படுத்தினார் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ஒருவர். “அவர் என் மகள் மாதிரி” என்றும் அவர் கூறியது நினைவிருக்கலாம். பட்டியல் இன்னும் நீளும்.
சராசரி தமிழ்ப் பெண் சபிக்கிறாள்: “கழகம் விரைவில் அழியும்”. நமது கேள்வி இதுதான். மாநில வளர்ச்சியில், முன்னேற்றத்தில் சரிபாதி சமுதாயத்துக்கு சமநீதி மறுக்கப்படும் முரட்டுத்தனம் தொடரப் போகிறதா?