அங்கிங்கெனாதபடி ஓங்குது சங்க சக்தி

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலர் (சர்கார்யவாஹ்) அறிக்கையில் இருந்து தொகுக்கப்பட்டது.

தெலுங்கானா

தெலுங்கானாவின் சங்காரெட்டி ஜில்லா
ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள்  இலக்கை வெற்றிகரமாக அடைந்து காட்டியிருக்கிறார்கள். ஜில்லாவின் எல்லா (73) மண்டலிலும் எல்லா (49) பஸ்தியிலும் விறுவிறுப்பான ஷாகா நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வைத்த இலக்கு.

ஜம்மு − காஷ்மீர்

ஜம்மு − காஷ்மீர் மாநிலத்தில் 557 ஷாகாக்கள்  நடக்கின்றன. பிப்ரவரி மாதம் சங்கமமாக ஒரே இடத்தில் நடைபெற்றன. 404 ஷாகாக்களின் 4,443 கார்யகர்த்தாக்கள் கலந்து கொண்டார்கள்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் (மத்ய வங்க) சென்ற ஆண்டு உத்தர நாடியா, தட்சிண நாடியா ஆகிய இரண்டு ஜில்லாக்களில் 180  சங்க அன்பர்கள் மொத்தமாக 500 நாட்கள்  சங்க விஸ்தார் பணியில் ஈடுபட்டார்கள்.  அதன் விளைவாக,  சர்சங்கசாலக் வருகையின்போது முழு சீருடையில் உத்தர நாடியாவில் 724 பேரும் தட்சிண நாடியாவில்  823 பேரும் அணிவகுத்தார்கள்.

கர்நாடகா தட்சிண்

கர்நாடகா  தட்சிண் மாநிலத்தில்  சங்க அன்பர்கள் யாருடைய பிறந்தநாள் என்றாலும் மரக்கன்று நட வேண்டும் என்று வலியுறுத்தும் சேவையில் ஈடுபட்டார்கள். பழைய செய்தித்தாள்களை சேகரித்து அதில் கிடைக்கும் தொகையை எளிய மாணவர்களுக்கு உதவ பயன்படுத்தி வருகிறார்கள். ஊரில் உள்ள கோயில்கள், பஸ் ஸ்டாண்ட், மைதானம் ஆகியவற்றை துப்புரவாக வைத்துக் கொள்வதில்
ஸ்வயம்சேவகர்கள் முனைகிறார்கள்.

உத்தர தமிழ்நாடு

சென்னை மகாநகரில் ரத்த தான முகாம்கள் ஜனவரியில் நடத்தப்பட்டன. மொத்தம் உள்ள 68 நகர்களில் 33 நகர்கள் ரத்த தான முகாம்களை நடத்தின; எஞ்சிய 33 நகர்கள் அவற்றில் பங்கேற்றன. 80 அமைப்புகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட  தன்னார்வலர்கள் நேரம் கொடுத்தார்கள். ரத்த தானம் செய்ய 2,750 பேர் முன் வந்து பதிவு செய்து கொண்டார்கள்; 1,667 பேர்  வெற்றிகரமாக ரத்த  தானம் செய்தார்கள்.இவர்களில் 265 பேர் முதன்முறையாக ரத்த தானம் செய்தவர்கள். ஷாகா தோறும் கட் அமைப்பு துல்லியமாக இயங்கியதால் ஏராளமானவர்களை ரத்த தானம் செய்ய ஊக்குவிக்க முடிந்தது.

சௌராஷ்டிரா

குஜராத்தின் மேற்கு கட்ச் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியது. மக்களுக்கு படிப்பறிவு கிடையாது;  சுகாதாரம் தெரியாது; தெய்வ பக்தி இல்லை.  சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும் குளிரிலும் கருவேலம் புதர்கள் தான் இவர்கள் தஞ்சம் அடையும் இடங்கள்.  சங்க முயற்சி காரணமாக மருத்துவ உதவி அளிக்கும் ஏற்பாடு வந்தது; இரண்டு கிராமங்களில் 45 வீடுகள் கட்டப்பட்டன.  கோயிலும் வந்தது.  அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் எல்லோரும் உடை, திருமணம் எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் போலவே நடந்து கொண்டார்கள்.   மெல்ல மெல்ல பழக்கம் மாறியது.  இப்போது நிக்காஹ் நடத்துவதற்கு பதிலாக கல்யாணங்கள் நடக்கிறது.  தெய்விக இசை முழங்க துறவியர், ஆன்றோர்கள் வந்து மக்களுக்கு அருளுரை வழங்குகிறார்கள்.  அந்த எல்லைப் பகுதி வாழ் மக்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

 

தென் கேரளம்

எழுச்சியூட்டும் சங்க ஸ்தாபகர்  டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து, காலம் சென்ற பிரச்சாரகர் ஸ்ரீ ரங்க ஹரி எழுதிய  ‘கேசவ் சங்க நிர்மதா’ என்ற புத்தகம் ஒவ்வொரு ஷாகாவிற்கும் விநியோகிக்கப்பட்டது. இதனை 1,107 ஷாகாக்களில் 7 நாட்களுக்கு, 1,430 கார்யகர்த்தாக்கள்  படித்து கலந்துரையாடினர்.

தர்ம ஜாகரண் சமன்வய (அறநெறி விழிப்புணர்வும் ஒருங்கிணைப்பும்)

இந்த நோக்கத்தில், பல்வேறு செயல் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானா,  மேற்கு மகாராஷ்டிரா பிராந்தங்களில் கிராமப்புற கோயில் பூசாரி பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டன. இவற்றில் 95 பழங்குடியினர் கிராமங்கள் உள்பட 859 கிராமங்களைச் சேர்ந்த 765 ஆண்களும்  233 பெண்களும் பயிற்சி பெற்றனர். உத்தர அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில், 5 இடங்களில் 773 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில்  திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 83 கிராமங்களைச் சேர்ந்த 2,732 குழந்தைகள் பங்கேற்ற சிசு சம்ஸ்கார் திட்டமான ‘கிருஷ்ண கோகுலம்’ விழா  நடைபெற்றது.  தர்மத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, 45 பிராந்தங்களில், 4,634 கிராமங்களை இணைத்து, 521 ஜாகரண் யாத்திரைகள் நடத்தப்பட்டன.

கோ சேவா
(பசுக்களைப் பேணுதல்)

இந்த பணித்திட்டத்தின் கீழ், காந்த், நகர் மாவட்டம், மஹாராஷ்டிராவில் தேசிய அளவில் ஒன்றும் பற்பல பிராந்தங்கள் தங்கள் மாவட்ட / தாலுக்காகளில் என்று மொத்தம் 1,144  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பங்கேற்றவர்கள் எண்ணிக்கை: 31,626.

பசுக்களைப் பேணி வளர்த்தல், பசுவை ஆதாரமாகக் கொண்ட விவசாயம், எரி பொருள் பயன்பாடு, பசுஞ்சாணத்தினால் விநாயகர் சிலை, தீபாவளி விளக்குகள், ஊதுவத்தி, திருநீறு  போன்ற வீட்டிற்கு உபயோகமான பொருட்கள் உற்பத்தி, சந்தைப்படுத்துதல், கோகுலாஷ்டமி, நவராத்திரி, பௌர்ணமி போன்ற நாட்களில் கோ பூஜை நடத்துதல், கோ சேவையின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் உள்ளூர் மக்கள் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராம விகாஸ் (ஊரக வளர்ச்சி)

கிராம மித்ரா (தோழன்) அன்பர்கள், பல்வேறு சமூகத்தினரிடம் கலந்து பேசி, ஒரே இடத்தில் கூடச் செய்கிறார்கள்; அவர்களை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் கிராமங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதுடன் ஆன்மிக ரீதியாக உயர்வடைந்து சமூகங்கள் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ ஊக்குவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, (மதுரா, பிருந்தாவனம், ஆக்ரா இவற்றை உள்ளடக்கிய பிரஜ பிராந்தத்தில் ஃபதேஹாபாத்  மாவட்டத்தில், 6 தொகுதிகளைக் கொண்ட 12 கிராம பஞ்சாயத்துகளில் கிராமத்தின் தொன்மையை விளக்கும், பாரம்பரியத்தை உயிர்ப்புடன்  வைத்திருக்கும் வழிமுறைகளைப் பற்றிய எளிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. கிராமங்களின் கைத்தொழில், வேளாண்மை மேம்பாட்டுப் பணிகள் கூட்டுறவு முறையாக, சுய உதவி குழுக்கள் வாயிலாக நிறைவேற்றப் படுகின்றன. கிராமத்தில் மாணவர்களுக்கான நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

சம்பர்க்க விபாக்
(பொது ஜனத் தொடர்பு)

மாவட்டம் முதல் தேச அளவு வரை 10 வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த  2,01,002 பிரமுகர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களில் 1,24,656 பேருடன் தொடர்பு கொள்ளப்ப்பட்டது. அவர்களுக்காக, 377 இடங்களில் சங்கத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில்,  15,694 பேர் பங்கேற்றனர். சென்ற ஆண்டின் பொதுக்குழு தீர்மானம் அச்சிடப்பட்டு 89,946 செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. மேலும் 18,903 நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. 576 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளில் 39,797 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 1,001 இடங்களில் நடைபெற்ற 3,634 அறைக் கூட்டங்களில் 46,401 பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தொகுப்பு: எஸ்.எஸ். மகாதேவன்,
எம். ஆர். ஜம்புநாதன்