22,850 அடி உயரத்தில் யோகா

இந்தோ திபெத் எல்லைக் காவல்படையை (ஐ.டி.பி.பி) சேர்ந்த மலையேற்ற வீரர்கள் குழு, சமீபத்தில் சாதனை பயணமாக, 24,131 அடி உயரம் கொண்ட அபி கமின் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இக்குழுவினர் தங்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிகரத்தின் உச்சியில் பாரத தேசியக் கொடியை ஏற்றினர். இந்நிலையில்,  அவர்கள், தங்கள் சாகச பயணத்தின்போது, 22,850 அடி உயரத்தில், மலை உச்சிக்கு செல்லும் வழியில் கடந்த வாரம் யோகா செய்யும் புகைப்படங்கள் தர்போது வெளியாகியுள்ளன. பாரத சீனப் போருக்கு மத்தியில், 1962ல் இந்தோ திபெத் எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, இந்தோ திபெத் எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி), 230க்கும் மேற்பட்ட மலையேறுதல் பயணங்களை வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.