இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென தமிழ் அன்னையை “தமிழணங்கு” என்ற பெயருடன் கூடிய ஒரு ஓவியத்தை பதிவிட்டுள்ளார். அந்த ஓவியத்தில், தமிழன்னையை வெள்ளைச் சேலை, பரட்டை தலை, பொட்டு வைக்காத பாழ் நெற்றி என அனைத்து வகையிலும் அசிங்கப்படுத்தி பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுவா தமிழன்னை? திலீப்குமார் என்ற ஏ.ஆர்.ரகுமான், தனது தமிழ் பற்றை நிரூபிக்க இதுபோல பதிவிடுவதைவிட, முதலில் தனது பெயரை அழகுத் தமிழில் மாற்றி தனது தமிழ் பற்றை நிரூபிக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஹிந்தியை அலுவல் மொழியாக திணிக்க பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியதாகக்கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், அதனை ஆதரிக்கும் விதமாகவே ரஹ்மான் இந்த ஓவியத்தை பதிவிட்டார் என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஒரு அன்னிய தேசத்தின் மொழியை கற்பதற்கு பதில் நமது நாட்டின் மொழியை கற்பது நல்லது என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட இக்கருத்தை இவர்கள் வேண்டுமென்றே திசை திருப்பி விட்டு குளிர் காய்கின்றனர். மேலும், வீட்டு வரி உயர்வு, அபரிமிதமான கடன், உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள், கவுன்சிலர்களின் அட்டகாசங்கள், நிறைவேற்றாத வாக்குறுதிகள் போன்ற தி.மு.க அரசின் பலவீனங்களை மறைக்கவே இந்த விவகாரம் பெரிதாக்கப்படுகிறது என வேதனையில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.