உலக மருத்துவ மாநாடு

மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று மாலை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பாரதத்தில் மருந்து தயாரிப்பு தொழிலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்குவதற்கு, உத்திப் பூர்வமான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க, பாரதம் மற்றும் சர்வதேச அளவிலான அரசு, தொழில்துறை, கல்வித்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைப்பதே இந்த தனித்துவமான முன்முயற்சியின் நோக்கம். பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பாரத மருந்து தயாரிப்புத் தொழிலில் உள்ள வாய்ப்புகளை இது பிரதிபலிக்கும். இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் 40க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள், சுற்றுச்சூழலை ஒழுங்குப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதி அளித்தல், தொழில் கல்வி கூட்டுறவு, புதுமையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றுவார்கள். உள்நாட்டு மற்றும் உலக மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.