தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 22 மாநிலங்களில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் உலகத் தரம் வாய்ந்த ‘வழித்தட வசதிகள்’ உருவாக்க முடிவு எடுத்துள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் லாரிகள் போக்குவரத்து ஆகிய இரண்டிற்குமான, தேசிய நெடுஞ்சாலைப் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையவுள்ளது. மின்சாரம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் நிலையங்கள், மின்னணு கட்டணம் வசூலிக்கும் வசதி,, உணவகம், சில்லரை விற்பனைக் கடைகள், ஏ.டிஎ.ம், குளியலறை, கழிப்பறை, குழந்தைகள் விளையாடும் பகுதி, கிளினிக், உள்ளூர் கைவினைப்பொருட்களுக்கான கிராமக் கடை, லாரிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, டிரக், டிரெய்லர் பார்க்கிங், பட்டறை, ஓட்டுநர் தங்குமிடம், சமையல், சலவைப் பகுதி போன்ற பல வசதிகள் இதில் அடங்கும். மேலும், இவற்றில் 130 வழித்தடங்கள் 2021-22 ஆம் ஆண்டிலேயே செயல்பாட்டில் வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த வசதிகள் உருவாக்கப்படும். பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த வேசைட் வசதிகளை என்.எச்.ஏ.ஐ வழங்கவுள்ளது.