எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு இன்சாஸ் மற்றும் ஏ.கே 47 துப்பாக்கிகளுக்கு மாற்றாக ஜெர்மன் அமெரிக்க கூட்டு தயாரிப்பான அதிநவீன ஸிக் 716 துப்பாக்கிகள் வழங்கப்பட்டு உள்ளன. அவர்களின் இரவு நேர போர் திறைனை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எதிரிகளை திறம்பட அடையாளம் கண்டு அவர்களை தாக்குவதற்கு உதவி புரியும் உலகத் தரம் வாய்ந்த இரவில் சண்டையிட உதவும் தொழில்நுட்ப கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இமேஜ் இண்டென்சிபையர் எனப்படும் அதிநவீன 29,790 இரவு பார்வை கருவிகளை சுமார் 1,410 கோடி ருபாய் மதிப்பில் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த இரவு பார்வை கருவிகள் பாரதத்திலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட உள்ளன. இதைத்தவிர தரைப்படையின் வான் பாதுகாப்பு படைக்கு 1,600 கோடி ருபாய் மதிப்பிலான 40 தாக்குதல் கட்டுபாட்டு ரேடார்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.