அந்த வைகையாற்றின் கரைகள் மிக வேகமாக பலபடுத்தபட்டன, ஆடிமாத வெள்ளம் ஆவணியில் கொஞ்சம் வேகமாக வந்து கொண்டிருந்ததுகிழக்கே அந்த நீரை திருப்பும் பொருட்டும் , பாசன வசதிகளை அதிகபடுத்தும் பொருட்டும் வைகையின் கரைகளை மிக வேகமாக உயர்த்த உத்தரவிட்டான் பாண்டிய மன்னன்வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய உழைப்பு அது, அவனின் குடிமக்கள் போர்கைதிகள் சிறைவாசிகள் என எல்லோரையும் களத்தில் இறக்கியிருந்தான்மிகபெரிய உழைப்பு அவர்களிடம் கோரபட்டது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பிழியபட்டனர் மானிட இனத்தின் மிகபெரிய தொழிலாளர் வதை அங்கு அரங்கேறியது, உண்ணவும் உறங்கவும் நேரமின்றி ஒவ்வொருவரும் கன்ணீர்விட்டு அதுவும் முடியாமல் அந்த சோமசுந்தரரை வாய்விட்டு அழைக்க ஆரம்பித்தார்கள் தொழிலாளர் களைப்பால் தவிக்கும் நொடியில் படைவீரர்களின் பிரம்பு அவர்கள் முதுகில் அடித்தது, வீரர்களின் கால்கள் மிதித்தன கண்ணீரும் ரத்தமும் வலியுடனும் மாடுகளை விட கேவலமாக அந்த தொழிலாளர் இனம் கதறியகதறல் வைகை முழுக்க எதிரொலித்து சிவாலயம் வரை கேட்டது மன்னனும் அவன் அதிகார பீடமும் யாரை பற்றியும் கவலையின்றி கரையினை பலப்டுத்துவதிலே குறியாய் இருந்தனர்.
ஆவணியில் பலபடுத்தினால் புரட்டாசியில் புதுவெள்ளம் வரும்பொழுது விளைச்சலை அதிகரிக்கலாம் எனும் கணக்கு மட்டும் இருந்தது வீட்டில் ஒருவர் பிடித்து வரபட்டு அடித்து வேலைவாங்கபட்டனர், அவர்களுக்கு அரை வயிறு கஞ்சியும் இருமணிநேர உறக்கம் மட்டுமே வழங்கபட்டது அப்படித்தான் வந்தியம்மை எனும் கிழவியும் இழுத்துவரபட்டாள், முதிர்ந்த வயதான அவளையும் வேலை செய்ய சொல்லி மிரட்டின சிப்பாய் கோஷ்டிகள் அவள் கதறி மறுத்தபொழுது தர தரவென வீரர்கள் இழுத்து சென்றார்கள், செல்லும் பொழுது “சிவனே சிவனே” என கதறினாள் அந்த வந்தியம்மை இவளை விட்டால் எல்லோரும் இவளை காட்டி ஓடிவிடுவார்கள் விடவே கூடாது என உறுமினான் அதிகாரி தலைவன் அவள் கதறிகொண்டு இழுபட்டு போய்கொண்டிருந்தபொழுதான் எங்கிருந்தோ ஓடிவந்தான் அந்த சிறுவன்அந்த பாட்டிக்கு பதிலாக தான் வேலை செய்வதாக உறுதியளித்தான், அவனை கட்டி முத்தமிட்ட வாந்த்தியம்மை அவனுக்கு தினமும் பிட்டு தருவதாக சொன்னாள், அவளால் முடிந்தது அதுதான் தினமும் அவள் காலையில் அவனுக்கு பிட்டும் கலயத்தில் கஞ்சியும் கொடுப்பாள், அதை பெற்று கொண்டு ஆற்றங்கரைக்கு செல்வான் அந்த சிறுவன் சிலநாட்களில் வேலையினை சரிபார்க்க பெரும் ஆர்வத்துடன் வந்தான் மன்னன், அவன் முன் தங்கள் கோரிக்கை எடுபடாமல் மனதால் சிவனிடம் அழுதபடி உழைத்து கொண்டிருந்தனர் மக்கள் ஆங்காங்கே தொழிலாளர்களை வீரர்கள் அடிப்பதையும் அவர்கள் கதறல் யானை பிளிறலையும் மிஞ்சி கேட்பதையும் கவனியாது நடைபோட்டான் மன்னன் ஒரு இடத்தில் வரப்பு உயராமலே இருந்தது, சினந்த மன்னன் இது யார் பகுதியென விசாரிக்க வந்தியம்மைக்கு பதிலாக பொறுப்பேற்ற சிறுவன் இடமாக இருந்தது அவனை தன் முன்னே பிடித்துவர உத்தரவிட்டான் மன்னன், மரத்தடியில் தூங்கி கொண்டிருந்த அவனை தூக்கி வந்தார்கள் வீரர்கள் சிவந்த மேனியும் பழுத்த பழம் போல் உடலும் கொண்டு நேற்றியில் திருநீறு மின்ன தூக்க கலக்கத்தோடு நின்றிருந்தான் சிறுவன், அரசனை நோக்கி மெல்ல புன்னகைத்தான் வேலையில் ஏதடா குறை என உறுமினான் மன்னன், வந்தியம்மை கொடுத்த பிட்டின் சுவையில் உறங்கிவிட்டதாக சொன்னான் சிறுவன் தன்னையே எதிர்த்து பேசிய சிறுவன் முதுகில் பிரம்பால் அடிக்க மன்னன் சமிக்கை காட்ட, சிறுவன் முதுகில் விழுந்தது அடி அந்த அடி உலகின் எல்லா உயிர்கள் மேலும் விழுந்தன மன்னனின் குதிரை அலறியது, ஒவ்வொரு வேலையாளும் அலறினர், ஈட்டி வாளை கையில் போட்டுவிட்டு வீரர்களும் அலறினர் அந்த பகுதியே அலறியது, வலி தாங்காமல் மன்னனும் அலறினான், அவனுடன் வந்த ராணியும் அலறினாள் அடியின் வலி என்னவென்று அப்பொழுதுதான் மன்னனுக்கு புரிந்தது, தொழிலாளரின் சிரமமும் புரிந்தது அந்த சிறுவனை உற்று பார்த்தான், அந்த மாய சிறுவனோ சிரித்தபடி மறைந்தான் தொழிலாளரின் பரிதாப நிலையினை தனக்கு சொல்ல சிவனே வந்ததை உணர்ந்த மன்னன் பெரும் சலுகைகளை வழங்கினான் ஆம் உலகின் முதல் தொழிலாளர் தினம் அன்றுதான் வைகை கரையில் உருவானது ஒரு ஆவணிமாதம் மூல நட்சத்திரமன்று உருவானது.
அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலம் அரசன் காலம் வரை தொழிலாளர் தினமாக விடுமுறையுடன் கொண்டாடபட்டது சோமசுந்தரனுக்கு பிட்டு படைத்து எல்லோருக்கும் ஓய்வு கொடுத்து வெகு விமரிசையாக கொண்டாடபட்டது, இன்றுவரை அது உண்டு பல்லாயிரவருடம் முன்பே சிவனே வந்து தொழிலாளர் நாளை வைகை கரையில் தமிழ் இந்துக்களுக்கு ஏற்படுத்திவிட்டு சென்ற மாபெரும் பாரம்பரியம் இந்துக்களுடையது அங்கு வந்து “மே 1” தொழிலாளர் தினம் என ஒரு கோஷ்டி சொல்ல அதையும் தயக்கமின்றி கொண்டாட கிளம்பிவிட்டான் அப்பாவி தமிழ் இந்து அவனின் பாரம்பரியமும் மதமும் இன்னும் பலவும் மறைக்கபட்டு மழுங்கடிக்கபட்டதால் ஏற்பட்ட மயக்கம் இது தமிழக இந்துவுக்கு ஆவணி மூல நட்சத்திர நாளே “உழைப்பாளர் தினம்” அந்த பல்லாயிர வருட பாரம்பரியம் கொண்ட இந்து தமிழன், மூல தெய்வமே வந்து தொழிலாளர் நலனை காத்து வரம் அருள பெற்ற தமிழன் உலக மக்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்தை மெல்லிய புன்னகையோடு சொல்லிகொண்டிருக்கின்றான்