தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் கம்பத்திற்கு கடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குமுளியிலிருந்து கம்பம் நோக்கி செனற இருசக்கர வாகனத்தில் பயணித்த விடுதலை சிறுத்தை கட்சி கம்பம் நகர பொறுப்பாளர் சா.மோகன், அனுமந்தன்பட்டி சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணை செயலாளர் அந்தோணி மகன் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களிடம் ரூபாய் 2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 5,200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.