பாரதத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது ராஜ்நாத் சிங் தற்சார்பு பாரதம் கொள்கை மூலம் உள்நாட்டுமயமாக்கல் முயற்சியில் பாரதத்தின் முன்னுரிமை பற்றி எடுத்துரைத்தார். இஸ்ரேல் நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் மேலும் பாரதத்தில் முதலீடு செய்யவும், பாரத நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தார். இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர், ராஜநாத் சிங் விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு பாரதத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, அதிநவீன தொழில்நுட்பங்களில் பாரதத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையேயான 30 ஆண்டுகால தூதரக உறவை அங்கீகரித்து இதனை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.