கோயில் நிலம் மீட்கப்படுமா?

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திரிசூலநாதர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர்  29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தமிழக அரசு, ‘திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மற்றொரு நிகழ்வில், வேளச்சேரியில் 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட வாசுதேவ பெருமாள் கோயிலை ஆக்கிரமிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் சில அரசியல்வாதிகளை தடுத்து நிறுத்தி, அதனை தமிழக அரசு மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.