தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்படும். இக்குழு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்கள்?
முன்னாள் பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர்தான் என்றாலும், பயங்கரவாதம், போலி 1,000, 500 ரூபாய் நோட்டுகள், நிழல் பொருளாதாரம் உள்ளிட்ட பல தேசவிரோதக் குற்றங்களை களைய, மத்திய அரசு கொண்டுவந்த 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை குறை கூறியவரும் சோனியா, ப. சிதம்பரத்துக்கு நெருக்கமானவரும்தான் இந்த ரகுராம் ராஜன். தீவிர இடதுசாரி ஆதரவாளரும் மத்திய அரசையும் அதன் அனைத்து திட்டங்களையும் குறை கூறுவதையே முக்கிய வேலையாக கொண்ட அபிஜித் பேனர்ஜியின் மனைவிதான் எஸ்தர் டஃப்ளோ. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றவர்தான் ஜீன் ட்ரெஸ். ஜார்கண்டில், சட்டத்தை மீறியதற்காக ஜீன் ட்ரெஸ், அவரது நண்பர் விவேக் குப்தாவையும் காவல்துறை கைது செய்து விசாரித்தது. அப்போது அதற்கெதிராக முதலில் குரல் கொடுத்தவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி. இந்த பின்னணி கொண்டவர்கள்தான் அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
இவர்கள் தமிழக அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்குகின்றனர், அதனை தமிழக நிதியமைச்சரும் முதல்வரும் எப்படி ஏற்கின்றனர், அதனால் தமிழகம் எப்படி முன்னேறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
சங்கீத பிரியன்