பயங்கரவாத பட்டியலில் தலிபான் நீக்கமா?

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய உள்ள தலிபான்கள்கடந்த முறை போல கொடுங்கோல் ஆட்சி நடத்த மாட்டோம் என்று தங்களுடைய ‘இமேஜை’ மாற்ற முயற்சித்து வருகின்றனர். தலிபான்கள் பத்திரிக்கை சந்திப்புகள் நடத்துகின்றனர், பத்திரிகையாளரின் கொடூர கொலைக்கு மன்னிப்பு கேட்டனர் என அவர்களுக்கு ஆதரவாக பல ஊடகங்களும் செயல்படுகின்றன. 1999ல் பின்லேடனுக்கு புகலிடம் அளித்தபோது தலிபான் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஐ.நா அதன் மீது பொருளாதார தடையும் விதித்தது. தற்போதும், ஐ.நா பாதுகாப்பு சபை, தலிபான்களை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.நா சபை, தலிபான் அமைப்பு  பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, ஐ.நா பாதுகாப்பு சபையின் தடைப்பட்டியலில் பல தலிபான் தலைவர்களின் பெயர்கள் இன்னமும் உள்ளது. தலிபான்களை குறிப்பிடும் வாக்கியங்கள் மட்டுமே பத்திரிக்கை செய்தி குறிப்பில் இருந்து அகற்றப்பட்டு உள்ளன’ என தெரிவித்துள்ளது.