மாணவிக்கு நீதி கிடைக்குமா?

அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.லாவண்யா என்ற பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி. இவர், திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றார். இவரை கிறிஸ்தவராக மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியது அந்த பள்ளி நிர்வாகம். மாணவி மதம் மாறாததால் பள்ளி விடுமுறையின்போது வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளியிலேயே தங்கவைத்து கழிப்பிடம் கழுவுதல், பள்ளியை சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், சமையல் செய்தல் போன்ற அனைத்து வேலையும் செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். இதனால், மனமுடைந்த மாணவி, மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், தற்போது 85 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதை எந்த ஊடகமும் இதுவரை வெளியில் சொல்லவில்லை. இவ்வளவு கொடுமைகள் நடந்தது தெரிந்தும் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைத் தலைவரை வலியுறுத்துவாரா?