உணர்வார்களா விவசாயிகள்?

தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி, முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதிகளில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் போர், கிணறுகள் அமைத்து, மின்சார பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அனுமதி இல்லாமல் ஆற்றுநீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 8 அன்று, மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விவசாயிகளை ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று நாகூசாமல் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.கவினரோ, அவர்களது தோழமை கட்சியினரான திருமா, சீமான், வைகோ, கம்யூனிஸ்ட்டுகள், தி.மு.க ஆதரவு விவசாய போராளிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என யாரும் இதுவரை பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனமாக உள்ளனர். ஆனால், இதற்கு பா.ஜ.க மூத்தத் தலைவரான ஹெச். ராஜா, பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பா.ஜ.கதான் விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற புதிய விவசாய சட்டங்கள், வங்கிகளில் நேரடி மானியம், வேம்பு கலந்த யூரியா, வருமானத்தை இரட்டிப்பாக்கும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இனியாவது உணர்வார்களா யார் விவசாயிகளின் உண்மையான நண்பன் என்று?