கருத்து கூறினாலே கைது செய்யும் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, நாட்டை துண்டாட வேண்டும் என டுவிட்டர் பதிவிட்ட தனது தோழமை கட்சியை சேர்ந்த ஜான் அஷோக் வரதராஜனை இதுவரை கைது செய்யவில்லை. திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் உள்ள ரோவர் கல்வி நிறுவனத்தின் தலைவரராக இருப்பவர் வரதராஜன். இவர் ம.தி.மு.க’வில் மாநில பொறுப்பில் உள்ளார். இவர் செயின்ட் ஜான் சங்கம் என்ற கிறிஸ்தவ அறக்கட்டளையின் நிர்வாகியும்கூட. இக்கல்வி நிறுவனம் அருகில் இருந்த விநாயகர் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இடையூறாக இருப்பதாககூறி 2020ல் இடித்துத் தள்ளப்பட்டது. கடந்த 2019ல் இவரின் அறக்கட்டளை நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து கொடுமைகள் தாங்காமல் இரண்டு பெண்கள் தப்பிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான வரதராஜனின் மகனும், ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும் காங்கிரஸ்காரருமான ஜான் அசோக், சுமந்த் சி ராமனின் டுவிட்டர் பதிவிற்கு பதில் அளிக்கையில், ‘தமிழகம் தனி நாடாக இதுவே தருணம்’ என தேசவிரோத, பிரிவினைவாத கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறை, இதுவரை ஜான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் அவர் கிறிஸ்தவர் என்பதாலா அல்லது கூட்டணி கட்சிக்காரர் என்பதாலா? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னதுபோல காவல்துறை டி.ஜி.பி கைகளில் இல்லை. தி.மு.கவினர் கைகளில்தான் உள்ளது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனியாவது நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறை?