ஆன்லைன் கலைக்களஞ்சியமான இந்த விக்கிபீடியா செய்திகள் அனைத்தும் உண்மை என பலரால் கண்மூடித்தனமாக நம்பப்படுகிறது. ஆனால், அது தற்போது அப்படி இல்லை, அது திருத்தப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் அதன் இணை நிறுவனர் லாரி சாங்கர்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘விக்கிபீடியாவை இனியும் நம்ப முடியாது, ஏனெனில், இடதுசாரிகள் இந்த டிஜிட்டல் கலைக்களஞ்சியத்தை கையில் எடுத்துக் கொண்டனர். இடதுசாரி ஆதரவாளர்கள், அவர்களின் சித்தாந்தத்திற்கு, நிகழ்ச்சி நிரலுக்கு பொருந்தாது என்று கருதும் தகவல்களைத் திருத்துகிறார்கள். மற்றத் தகவல்கள் அனைத்தும் போலி தகவல்கள் என முத்திரை குத்தப்பட்டு நீக்கப்படும்.
உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் குறித்த பதிவில், இ டதுசாரி ஆசிரியர்களால், ஜோ பிடன், அவரது குடும்பம் பற்றிய பல தகவல்கள் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. பிடனின் மகன் ஹண்டர் பிடனின் சந்தேகத்திற்கிடமான வணிக நடவடிக்கை தகவல்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.