தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது ஒருபுறம் என்றால் கேரளாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை, எல்லைப்பகுதியில் கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவருக்கும் வரும் 5ம் தேதி முதல், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயமாக்கப்படும். ‘நெகட்டிவ்’ சான்றிதழ் உள்ளவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, 14 நாட்கள் முடிந்தவர்களும் மட்டுமே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறியுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனே பரிசோதனையை துவக்காமல் எதற்காக இந்த தேவையற்ற காத்திருப்பு என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.