நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்காவின் நிறைவு விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில்,
“சத்தியம், கருணை, தூய்மை, தவம் ஆகியவை நமது தர்மத்தின் நான்கு சக்கரங்கள். இதுவே நமது தேசிய வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளது. உலகம் முழுவதையும் மகிழ்விக்கும் ஒரு பெரிய இலக்கை நாம் கொண்டுள்ளோம். கொரோனாவின் போது, நன்கு அறியப்பட்ட வடிவத்தில் இருந்த சங்கப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் சங்கப் பணி வீடுகளில் நடந்து கொண்டிருந்தது. கொரோனாவின் போது சேவை) என்பது ஸ்வயம்சேவகர்களின் முக்கிய வேலையாக மாறியது.
ஞானவாபி பற்றி நமக்கு சில நம்பிக்கைகள் உள்ளன, அவை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன, அது பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை நாம் ஏன் தேடவேண்டும்? நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும்? பாரதத்தில் அந்த மதம் தோன்றவில்லை என்றாலும், மசூதிகளும் வழிபாட்டுத் தலங்களாகவே உள்ளன. இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஹிந்துக்களை போலவே இந்தியர்களாக உள்ளனர். இதை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வழிபாட்டிற்கும் நாங்கள் எதிரிகள் கிடையாது. அனைவருக்கும் வழிபாட்டுச் சின்னங்களின் மீதான அங்கீகாரம் மற்றும் தூய்மையான உணர்வு உள்ளது.
மக்கள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள், அப்படி நடந்தால் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறையை புனிதமானதாகவும், உன்னதமானதாகவும் கருதி, முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்வி கேட்கக் கூடாது.
இரண்டு வெவ்வேறு மதங்களாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே ஹிந்து முனிவர்கள் மற்றும் மன்னர்களின் வழித்தோன்றல்கள். அவர்கள் நமது பண்டைய காலங்களிலிருந்து வந்தவர்கள். அனைவரும் அதே மூதாதையர்களுடைய சந்ததியினர். எனவே நாம் அனைவரும் ஒரே பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம். இப்போது வரும் அனைத்து வழக்குகளுக்கும் வரலாறு உள்ளது. அதை நாம் மாற்ற முடியாது. நாம் வரலாற்றை உருவாக்கவில்லை. இன்று தங்களை ஹிந்துவாகவோ, முஸ்லீம்களாகவோ அழைத்துக் கொள்பவர்கள் யாரும் அதை உருவாக்கவில்லை. இது அந்தக் காலத்தில் நடந்தது.
வெளிநாடுகளில் இருந்த வந்த ஆக்கிரமிப்பாளர்கள் மூலமாக நமது நாட்டுக்குள் வந்தது இஸ்லாம். இந்தியாவின் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் பொறுமையைக் குறிவைப்பதே அந்தத் தாக்குதல்களின் நோக்கம். இது போன்ற ஆயிரக்கணக்கான ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் வரலாற்று ரீதியாக அழிக்கப்பட்டு விட்டன.ஆனால் இன்று அதைக் கேவலப்படுத்துவது அர்த்தமற்றது. ஹிந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இன்றைய முஸ்லீம்களின் முன்னோர்களும் ஹிந்துக்கள்தான்.நாம் அனைவரும் ஒன்று. முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். பிரிவினைக் குரல் எழுப்ப வேண்டாம்.
அதிர்ஷ்டவசமாக, ரஷ்யா உக்ரைன் நெருக்கடியில் பாரதம் சமநிலையான அணுகுமுறையை எடுத்துள்ளது. அது தாக்குதலை ஆதரிக்கவுமில்லை, ரஷ்யாவை எதிர்க்கவும் இல்லை. இது போரில் உக்ரைனுக்கு உதவவில்லை, ஆனால் அவர்களுக்கு மற்ற பல மனிதாபிமான உதவிகளை பாரதம் வழங்கி வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஷ்யாவிடம் பாரதம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறது.
போரை எதிர்ப்பவர்களுக்கும் தூய நோக்கங்கள் இல்லை. அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறார்கள். மேற்கத்திய நாடுகள் முன்பு பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டு தங்கள் நாட்டு வெடிமருந்துகளை சோதித்தது போல இன்று அங்கே நடத்துகின்றனர். பாரதம் மேலும் சக்தி வாய்ந்ததாக மாற வேண்டும், அப்போது நெருக்கடி ஏற்படாமல் தடுக்கும் நிலையில் அது இருக்கும்.
பாரதம் போதுமான அளவு சக்தி வாய்ந்தவராக இருந்திருந்தால், அது போரை நிறுத்தியிருக்கும். ஆனால் அது முடியாது. அதன் சக்தி இன்னும் உயர்ந்து வருகிறது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. சீனா ஏன் அவர்களை தடுக்கவில்லை? ஏனென்றால் இந்தப் போரில் அது எதையோ எதிர்பார்க்கிறது. இந்தப் போர் நம்மைப் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது.
நாம் நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், மேலும் சக்திவாய்ந்தவர்களாக மாற வேண்டும். பாரதத்தின் கைகளில் இதுபோன்ற அதிகாரம் இருந்திருந்தால், இதுபோன்ற சம்பவம் உலகிற்கு வந்திருக்காது”என்று கூறினார்.
இந்த சங்க சிக்ஷா வர்காவின் நிறைவு விழாவில் தாஜி உபாக்கிய கமலேஷ் படேல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். “நம் நாட்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள், பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு ஏதாவது ஒன்றை விரும்புகிறது. ஆனால், நாட்டுக்காக நாம் அனைவரும் என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். நாட்டை உருவாக்குவது நாம் அனைவரும் தான்” என்று தாஜி கூறினார்.