சோனியா ராகுலை ஏன் தாக்கி பேசினேன்?

ஜம்முவின் பதேர்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், “சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். எனது கடிதத்தில் உள்ள அனைத்தையும் அவரிடம் தெரிவித்தேன். மூன்று நாட்கள் அமைதியாக இருந்தேன். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அதன் முடிவில் அவர்கள் தரப்பில் இருந்து எனக்கு எதிராக ஏவுகணைகள் வீசப்பட்டது, துப்பாக்கிச் சூடு தொடங்கப்பட்டது. அப்போது நான் சும்மா இருக்க முடியாது. யாராவது உங்களைத் தாக்கினால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாத்திலும் அரசியலிலும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் என் மீது ஏவுகணைகளை வீசினார்கள். நான் 303 துப்பாக்கியால் அவற்றை சுட்டு அவைகளை அழித்தேன். நான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியிருந்தால் போதும், அவர்கள் காணாமலே போயிருப்பார்கள்” என கூறினார்.