தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை சோதனை நடத்தி பலரை கைது செய்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க வினர் அலுவலகங்கள், வீடுகளில் சில பயங்கரவாதிகளால் பெட்ரோல், மண்ணெண்ணை பாட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதனை நாங்கள் செய்யவில்லை, பா.ஜ.கவினர் தங்கள் வீடுகளில் தாங்களே குண்டு வீசிக்கொள்கின்றனர் என பி.எப்.ஐ அமைப்பினர் அவசர அவசரமாக பேட்டியளித்தனர். திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரும் இதே வகையில் பேசிவந்தனர். ஆனால், இதனை யார் செய்தார்கள் என்பதற்கு காவல்துறை சமீபத்தில் செய்த கைதுகளே சாட்சியாக உள்ளன. அவ்வகையில், சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் என்பவரின் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய, எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் எஸ்.டி.பி.ஐ சேலம் மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 34வது வார்டு கிளை தலைவர் காதர் உசேன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷெரீப் பாஷா, முகமது ரபி, முகமது இஸ்மாயில், முகமது ஹாரிஸ், காஜா உசேன் ஆகியோரையும் கைது செய்தனர். ஈரோட்டில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல கோவையில் பா.ஜக. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது மற்றும் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்தது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, கோவையில் பா.ஜக. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது மற்றும் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்தது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். குனியமுத்தூரில் பரத், தியாகு ஆகியோரது வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(நன்றி: https://www.hindutamil.in/news/tamilnadu/873910-salem-coimbatore-erode-petrol-bomb-blasts.html)