2டிஜி யாருக்கு கொடுக்கலாம்

டி.ஆர்.டி.ஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்), டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரிஸ் நிறுவனத்துடன் இணைந்து, டி-டியோக்ஸி டி-குளுகோஸ் – 2டிஜி மருந்தை தயாரித்துள்ளது.இந்த 2டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 1ம் தேதி டி.சி.ஜி.ஐ அனுமதி அளித்தது. இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். ‘இதை மருத்துவரின் பரிந்துரை இன்றி வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மிதமான கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை 2-டிஜி மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த மருந்தை எடுத்துக்கொள்ள விரும்பும் நோயாளிகள், அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை வழியாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தை 2DG@drreddys.com என்ற இணைய முகவரியில் அணுகி, பதிவு செய்து, பெற்று பயன்படுத்தலாம். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய்,இருதய நோய்கள், ஹெபாடிடிஸ், சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால் கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்குகொடுக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 2 முதல் 2.5 நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதால் ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம் வரை குறைக்கலாம்’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.