மூன்றாவது அலை எப்போது?

ஐதராபாத் ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை கணித்துள்ளனர். இரண்டாவது அலை குறித்த இவர்களது கணிப்பு சரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூற்றுப்படி, மூன்றாவது அலை அடுத்த சில நாட்களில் துவங்கும். அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனாலும் இரண்டாவது அலையைப் போல் மூன்றாவது அலையில் பாதிப்பு, உயிரிழப்புகள் அதிகம் இருக்காது. தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1.50 லட்சத்துக்குள் தான் இருக்கும். மூன்றாவது அலை பாதிப்பை தடுப்பதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தினால் மூன்றாவது அலை பாதிப்பை நிச்சயம் குறைக்க முடியும்’ என அவர்களின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எனவே, மக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி, சோப் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி மூன்றாவது அலை ஏற்படாமல், ஏற்பட்டாலும் அதில் சிக்கிக்கொள்ளாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.