கொரோனா 3வது அலை எப்போது?

இந்தியாவில், கோவிட் தொற்றின் 3வது அலை, மக்களின் நடத்தை, மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமையும். தற்போதுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில், 3வது அலை மூன்று விதத்தில் அமையலாம். கோவிட் 3வது அலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் உச்சமடையும். இது 2வது அலையைக் காட்டிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், பாதிப்புகள் குறைவாக இருக்கும். 3வது அலையை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என  ஐ.ஐ.டி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.