தனிநபர் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. தங்களின் விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பாரதத்தில் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இதனால், மத்திய அரசை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.நீதிமன்றம், பதில் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘வாட்ஸ்அப் நிறுவனம், தனது புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. தனது கொள்கையை மக்களிடம் திணிக்க தந்திரமாக வேலைகளை செய்து வருகிறது.மத்திய அரசு புதிதாக தயாரித்துள்ள தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.அதற்கு முன்பாக, தனது புதிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அந்த நிறுவனம் முனைப்பு காட்டுகிறது.வாட்ஸ்அப் நிறுவனத்தின் தந்திரங்களை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியுள்ளது.