வாட்ஸ்ஆப் கட்டாயப்படுத்தாது

வாட்ஸ்ஆப், தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, ‘பிரைவசி’ கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது, மத்திய அரசும் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில், இது குறித்த வழக்கு விசாரணையின்போது, வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில், ‘புதிய ‘பிரைவசி’ கொள்கையை, வாட்ஸ்ஆப் நிறுத்தி வைக்கிறது. கொள்கையை ஏற்க எந்த பயனாளர்களையும் கட்டாயப்படுத்த மாட்டோம். கொள்கையை ஏற்காதவர்களுக்கு வழங்கப்படும் சேவை எவ்விதத்திலும் குறைக்கப்படாது. தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்வரை, புதிய கொள்கை குறித்த செய்தியை பயனாளர்களுக்கு காட்டுவோம். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டது.