பி.பி.சி ஆவணப்படத்தின் உண்மை நோக்கம் என்ன?

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இங்கிலாந்து அரசு ஆதரவு தொலைக்காட்சியான பி.பி.சி நிறுவனம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திட்டமிட்ட ரீதியில் இந்த நேரத்தில் வெளியிட்டுள்ள காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜி-20 தலைவர் பதவியை பாரத் ஏற்கும் நிலையில் இது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார். மேலும், “சர்ச்சைக்குரிய பி.பி.சி ஆவணப்படமான ‘இந்தியா: மோடி கேள்வி’ ஆவணப் படம், நமது தேசம் தற்போது ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்கும் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை வெளிவருவதற்கு இந்த குறிப்பிட்ட நேரத்தை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள். நமது நாடு சுதந்திரம் பெற்றபோது, ​​நமது நாடு தனது சுதந்திரத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாக இல்லை என்று முன்னர் அறிவித்த அந்த நாட்டிலிருந்து இந்த ஆவணப்படம் வெளிவந்துள்ளது. நமது வீழ்ச்சியை பற்றி கனவு கண்டவர்களால் நமது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் இவ்விவகாரத்தில் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால் நம் நாட்டில் உள்ள சிலர் நமது நீதிமன்றங்களை விட பி.பி.சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட நமது பழைய காலனித்துவ எஜமானர்களின் பாரதம் துண்டு துண்டாக உடைந்து விடும் என்ற கணிப்பு நிறைவேறவில்லை; நாம் இன்னும் ஒன்றுபட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜனநாயக நாடாக உள்ளோம். இப்போது உலகின் முன்னோடியாக உள்ளோம். பழைய காலனித்துவ எஜமானர்களின் இந்த ஆவணப்படம் அதன் இழிவான தகுதிக்கு ஏற்பவே நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.