வெறுப்பு பேச்சுகள் மீது என்ன நடவடிக்கை?

குர்பான் அலி என்ற மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் 15 பிப்ரவரி 2023 அன்று தாக்கல் செய்த மனுவில், ஹிந்து குழுக்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதில், மனுவில், டிசம்பர் 17, 2021 அன்று ஹரித்வாரில் யதி நரசிங்கானந்த் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியதையும், டிசம்பர் 19, 2021 அன்று டெல்லியில் ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியதையும் மேற்கோள் காட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் ‘நீதிக்கான ஹிந்து முன்னணி’ (Hindu Front for Justice) என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பதில் மனு தாக்கல் செய்தது.

நீதிக்கான ஹிந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர்கள் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், “முஸ்லிம் கூட்டத்தினர் ‘சர் தான் சே ஜூடா’ (தலையை வெட்டுவோம்) என்று பலமுறை கூச்சலிட்டு ஊர்வலங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கன்னையா லால், உமேஷ் கோஹ்லேக்கள் கொல்லப்பட்டதை போன்ற ஹிந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட பல சம்பவங்கல் நாடு முழுவதும் நடந்தன. ஹிந்துக்களை மதம் மாற்றும் இயக்கம் தேசம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கி போன்றவர்கள் ஹிந்து மத விரோத கருத்துகளை பொது வெளிகளில் பேசி பரப்பி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இது போன்ற பல்வேறு ஹிந்து விரோத சம்பவங்கள், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இழைத்த மத வெறுப்புக் குற்றங்கள், கிறிஸ்தவர்களின் மதமாற்ற சம்பவங்கள் போன்றவை பட்டியலிடப்பட்டு இருந்தன. மேலும், அந்த மனுவில், “ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்யும் வெறுப்புக் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன, ஆனால் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது முஸ்லிம் கும்பல் மீதான பயம் காரணமாகவோ குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. இருப்பினும், சில மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மட்டுமே வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இதுவரை, முஸ்லிம்களில் ஒரு பிரிவினரிடம் நிலவும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பைக் கட்டுப்படுத்த எந்த ஒரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகள் பாரதம் முழுவதும் மதமாற்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக பட்டியலின பழங்குடியின ஹிந்துக்களை வேட்டையாடி வருகின்றனர். மேகாலயா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் பாரதத்தில் உள்ள பிற இடங்களிலும் கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய முயல்கிறார்கள். அதை எல்லாம் குறிப்பிடுவதற்கு காகிதத்தில் இடமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹரித்வாரிலும் டெல்லியிலும் வெறுப்பூட்டும் வகையில் பேசப்படும் பேச்சுக்களில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிய பொதுநல வழக்கில் இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.