ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியமான ஒரு அங்கம்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள ஒட்டுமொத்த சமுதாயமும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றது.
எதிரெதிர் அணிகள், ஒரு உத்வேகத்தில் பரஸ்பரம் குற்றம்சாட்டுவது வழக்கமான ஒன்று தான். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் நம் நாட்டிற்கு சொந்தமானவையே,
வேட்பாளர்கள், அவரது ஆதரவாளர்கள், வாக்காளர்கள் அனைவருமே நம் நாட்டு குடிமக்கள் தான்
ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் நடைபெற்ற வன்முறைகள் கண்டித்தக்கவை மட்டுமல்ல
ஆனால் நன்கு திட்டமிடப்பட்டது போல தெரிகிறது.
இந்த வன்முறையின் போது, சமூக விரோதிகள் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர், பல அப்பாவிகளை கொன்றதோடு, வீடுகளை கொளுத்தியுள்ளனர்.
கடைகள் மற்றும் வணிக வளாகங்களை சூறையாடியுள்ளார்கள்.
கட்டுக்கடங்காத இந்த வன்முறை காரணமாக, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரையும், மானத்தையும் காத்துக் கொள்ள வேறு இடங்களுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளார்கள்.
கூச்பிஹார் முதல் சுந்தர்பன் வரை மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இந்த கொடூரமான வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக கண்டிக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய இந்த வன்முறையானது, அனைவரின் கருத்துக்களையும் மதித்து, அனைவரும் ஒன்றாக வாழவேண்டும் எனும் பாரத கலாச்சாரத்திற்கு விரோதமாக உள்ளது.
அதுமட்டுமின்றி ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராக உள்ளது.
இந்த வன்முறையை அரசு நிர்வாகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததுதான் மிகவும் கொடுமையான ஒரு விஷயம். கலவரக்காரர்கள் எதற்கும் பயப்படுவது போல தெரியவில்லை. மாநில காவல்துறை மற்றும் நிர்வாகமும் வன்முறையை கட்டுப்படுத்த தயங்கி விட்டது
ஆட்சியில் இருப்பது, யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் முதன்மையான பொறுப்பு , சட்டம் ஒழுங்கை பராமரித்து, சமூக விரோதிகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை தண்டித்து, சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்துவது தான்.
தேர்தல் வெற்றி என்பது அரசியல் கட்சிக்கு உரியது, ஆனால் தேர்ந்தெடுத்திக்கப்பட்ட அரசு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கடமைப்பட்டது.
வன்முறையை உடனே கட்டுப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என்றும் ,
மக்கள் மனதில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வதாரம் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கவும்,
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அரசை வலியுறுத்துகிறோம். மேற்கு வங்கத்தில் அமைதி ஏற்படுத்த அமைதி ஏற்பட, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறோம்.
இத்தருணத்தில் சிந்தனையாளர்கள், சமுதாய, ஆன்மீக மற்றும் அரசியல் அமைப்புகள், இந்த வன்முறையை கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்டோருடன் நின்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்டுக்கொள்கிறது.
தத்தாத்ரேய ஹோஸ்பாலே
ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர்