மேற்கு வங்கம் சிவில் சொசைட்டி குழு அறிக்கை

மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து சிவில் சமூகக் குழுவான புத்திஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு (ஜி.ஐ.ஏ) ஒரு அறிக்கையைமத்திய இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியிடம் சமர்ப்பித்துள்ளது.இதனை குறித்து பேசிய கிஷன் ரெட்டி, ‘இக்குழு உறுப்பினர்கள் உண்மை கண்டறியும் குழுவாக செயல்பட்டனர். திருணமூல் குண்டர்களால் கொலை செய்யப்பட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, சொத்துக்கள் சுறையாடப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து உரையாடி தகவல்கள் சேகரித்தனர். ஜி.ஐ.ஏ தவிர, பல்வேறு குழுக்களும் இது போன்ற அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன.மத்திய உள்துறை அமைச்சருடன் கலந்து பேசிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் கூறினார்.ஜி.ஐ.ஏ குழுவில் ஒருவரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மோனிகா அரோரா, ‘திருணமூல் கட்சியினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கை பார்த்தது.பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் ஆகியவை இதனை விசாரித்து தேவையான சம்மன் அனுப்ப வேண்டும்.மாநில டி.ஜி.பி.மற்றும் தலைமைச் செயலாளர் சட்டத்தின் படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டும்’என்று தெரிவித்தார்.