பாரதத்தின் முடிவுக்கு வரவேற்பு

உக்ரைன் ரஷ்ய போரைத் தொடர்ந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதித்து வரும் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ஜி7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர்கள் என விலை உச்சவரம்பு நிர்ணயித்தன. இதனை ரஷ்யா ஏற்க மறுத்தது. இந்நிலையில், ரஷியாவுக்கான பாரதத் தூதர் பவன் கபூர் மற்றும் ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் விதித்த விலை உச்சவரம்புக்கு ஆதரவு இல்லை என்ற பாரதத்தின் முடிவை ரஷ்ய துணை பிரதமர் வரவேற்றுள்ளார் என தெரிவித்துள்ளது.