பி.எப்.ஐ தடைக்கு வரவேற்பு

வி.ஹெச்.பி வரவேற்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், “பயங்கரவாதத்தின் குலத்தை” ஒழிக்காத வரையில் நாடு பயங்கரவாதம் இல்லாததாக இருக்க முடியாது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஒரு பயங்கரவாதக் குலமாகும். அதன் குலத்தை நீங்கள் அழிக்காத வரை அதன் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மத்திய அரசு பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் பி.எப்.ஐக்கு பிறகு அத்தகைய மற்றொரு அமைப்பு உருவாகாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்”  என்று கூறினார்.

அஜ்மீர் தர்கா வரவேற்பு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை அஜ்மீர் தர்கா தலைவர் ஜைனுல் அபேதீன் அலி கான் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “சட்டத்திற்கு இணங்கவும் பயங்கரவாதத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நாமும் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த நிறுவனத்தை விடவும், எண்ணத்தை விடவும் தேசம் பெரியது. இந்த நாட்டை உடைக்க வேண்டும், இங்குள்ள ஒற்றுமை மற்றும் இறையாண்மையை உடைக்க வேண்டும், நாட்டின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று யாராவது பேசினால், அவர்களுக்கு இங்கு வாழ எந்த உரிமையும் இல்லை. பி.எப்.ஐ அமைப்பின் தேசவிரோத நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தேன்” என்று கூறினார். இதேபோல, அகில இந்திய சஜ்ஜதநாஷின் கவுன்சில் தலைவர் நசிருதீன் கானும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். எந்த ஒரு அமைப்பும், நிறுவனமும் நாட்டை விட பெரியது இல்லை என்று தெரிவித்தார்.

அகில இந்திய பார் அசோசியேஷன் வரவேற்பு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ததை வரவேற்றுள்ள மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவருமான ஆதிஷ் சி அகர்வாலா, பி.எப்.ஐ தடை மூலம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக மற்றொரு “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு வழக்கறிஞர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் காவலாளிகளாகத் தொடரவும், பி.எப்.ஐ மற்றொரு வித்தியாசமான பெயரில் முளைக்காமல் பார்த்துக் கொள்ளவும் கோரிக்கை விடுக்கிறோம். பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கைகளைத் தொடருங்கள். இது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பி.எப்.ஐ பிரச்சினையை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வார். பாரதத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு விரோதமான சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார். பாரதத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுபடுத்த வேண்டியதும் இந்த வேளையில் அவசியம். முஸ்லிம்களும் பல முஸ்லிம் தலைவர்களும் தொடர்ந்து சிறந்த தேசபக்தர்களாக இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பி.எப்.ஐ என்பது தடைசெய்யப்பட்ட சிமியின் மறுபிறவியைத் தவிர வேறில்லை. முஸ்லீம் சகோதரர்களே உங்கள் மத்தியில் உள்ள இந்த தவறான கூறுகள் எப்படி முழு சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது பிரிவினைவாத, பிளவுபடுத்தும் மற்றும் பயங்கரவாத தொடர்புகளின் நாடு தழுவிய வலையமைப்பை உருவாக்கியது” என தெரிவித்தார்.

அசாம் முதல்வர் வரவேற்பு: பயங்கரவாதத் தொடர்புகளுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்வதற்கான மத்திய அரசின் முடிவை வரவேற்ற அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நமது தேசம், பிளவு அல்லது சீர்குலைக்கும் வடிவமைப்பு கொண்ட யாரையும் உறுதியாக கையாளும். பாரதத்திற்கு எதிரான பிளவுபடுத்தும், சீர்குலைக்கும் எவரும் இரும்புக்கரம் கொண்டு கையாளப்படுவார்கள் என்பதை உறுதி செய்வதில்மத்திய அரசு உறுதியாக உள்ளது. மோடி சகாப்தத்தில், பாரதம் தீர்க்கமானது, தைரியமானது. பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள், வெளிப் பார்வைக்கு ஒரு சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக செயல்படுகின்றன. ஆனால், அவர்கள் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை பயங்கரவாதமயமாக்கும் ஒரு ரகசிய நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகின்றனர்” என தெரிவித்தார்.

முஸ்லிம் லீக் வரவேற்பு: பி.எப்.ஐ தடைக்கு கேரளாவை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. ஏகே முனீர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பி.எப்.ஐ தடை நியாயமானதாக இருந்தால் நாங்கள் வரவேற்கிறோம். .பிஎப்ஐ தடை அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்துவிடாது. இதற்கு முன்னதாக, இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கமும் (சிமி) தடை செய்யப்பட்டது. ஆனால், தேசிய வளர்ச்சி முன்னணி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் பின்னர் உருவாகின’ என்றார்.

மகாராஷ்டிர முதல்வர் வரவேற்பு: “பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நாட்டில் இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப எந்த உரிமையும் இல்லை. மத்திய அரசு அதை தடை செய்யும் சரியான முடிவை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது தேச பக்தர்களின் பூமி” என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.