கைவினை பொருட்களுக்கு வரவேற்பு

‘உள்நாட்டு பொருட்களுக்கு குரல் கொடுப்போம்’ என்ற கருப்பொருளில் டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையிட்ட மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, செய்தியாளர்களிடம், ‘டெல்லியில்  நடைப்பெற்ற 35வது கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் 30க்கும்  மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்களின் கைவினைப் பொருட்களை வாங்கி கலைஞர்களை மக்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் மக்கள் வருவதால், இந்த  கண்காட்சியை ஜனவரி 31ம் தேதி மாலைவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும் சரியான தளம் ‘ஹூனார் ஹாத்’ என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி.  நாட்டின் கலை மற்றும் கைவினை பாரம்பரியத்தை மட்டும் மத்திய அரசு பாதுகாப்பது மட்டும் இல்லாமல், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு புதிய சக்தி மற்றும் சந்தை வாய்ப்புகளையும் அளிக்கிறது’ என தெரிவித்தார்.