தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில், ‘உலகுக்காக பாரதத்தில் தயாரிப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும், நிலையான, தரமான உற்பத்தியை தர வேண்டும். செமிகண்டெக்டர் உற்பத்தியில் தன்னிறைவுவை அடைய வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் காலத்தின் தேவை மட்டுமல்ல, அது உலகிற்கு நமது உற்பத்தித் திறனைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. நமக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் சுயசார்பு சார்ந்த சந்தையாக பாரதத்தை உருவாக்குவதே நமது நோக்கம். இது மனிதவளம் மற்றும் திறமைக்கு ஊக்கமளிக்கும் முயற்சி. ‘மேக் இன் இந்தியா’ எல்லையற்ற வாய்ப்புகளைத் தருகிறது. பாரதத்தை உற்பத்தி சக்தி மையமாக உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது நாடு மனிதவளம் மற்றும் வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இது நமது இலக்குகளை அடைய கணிசமாக உதவும்” என்று கூறினார்.