மதமாற்றத்தை தடுக்கும் வழி

சீக்கியர்களின் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) என்ற அமைப்பு, சீக்கியர்களிடம் நடைபெறும் தீவிர கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுக்கம், முள்ளை முள்ளால் எடுப்பது போல அவர்களின் பாணியிலேயே களமிறங்கியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் பி.பி ஜாகிர் கவுர், இது குறித்து கூறுகையில், ‘கர் ‘கர் அந்தர் தர்மசால்’ (ஒவ்வொரு வீட்டிலும் உள்ள புனிதத் தலம்) என்ற இந்த பிரச்சாரம் சீக்கியர்களிடையே அவர்களின் மத நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வதுடன் இளம் தலைமுறையினரிடம் அவர்களின் பாரம்பரிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பெருமை எடுத்துரைக்கும். இதற்காக வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

150 மதத் தலைவர்கள் அடங்கியக்குழு இதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றன. சீக்கிய தர்மத்தை எடுத்துரைப்பதற்காக அவர்கள் 7 பேர் கொண்ட சிறிய குழுவாகப் பிரிந்து கிராமம் கிராமமாக கிறிஸ்தவ சுவிசேஷகர்களைப் போலவே, சீக்கிய இலக்கியங்களை விநியோகிப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

மிஷனரிகளின் பிரார்த்தனைக் கூட்டத்தை முறியடிக்க அவர்களை போலவே சீக்கிய மத போதகர்களும் தினமும் மாலை உள்ளூர் குருத்வாராவில் குழந்தைகளை கூட்டி, குர்பானி (கீதங்கள்) சரியாக ஓதுவதைக் கற்றுக்கொடுக்கவும், சீக்கிய வரலாறு, கலாச்சாரம், தத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். மதம் மாற்றப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து அவர்களை பாரம்பரிய சீக்கிய நம்பிக்கையில் பெருமை கொள்ள வைக்கிறோம்.

இதைத் தொடர்ந்து திவான் (மத சபை) தாதிஸ் (பாலாட் பாடகர்கள்) மற்றும் கவிஷர்கள் (நாட்டுப்புற பாடகர்கள்) ஆகியோர் சமூக உறுப்பினர்களை அவர்களின் நம்பிக்கை மற்றும் மதிப்புகள் குறித்து உணர்த்துவார்கள். கடைசி நாளில் அமிர்த சஞ்சார் (துவக்க சடங்கு) விழாவுடன் இப்பிரச்சாரம் நிறைவடையும். இது தவிர, மதத் தலைவர்கள், பொது சந்திப்பு இடங்களில் கிராம மக்களுடன் முறைசாரா உரையாடலில் ஈடுபடுகின்றனர்’ என கூறினார்.