விளம்பரங்களுக்கு வீண் செலவு

விளம்பரப் பிரியரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது விளம்பர மோகத்தாலேயே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். டெல்லியில் அவரது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில், அரசு பணத்தை விளம்பரங்களுக்கு வாரி இறைத்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பஞ்சாபிலும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களுக்கு அதிகம்செலவிட்டு வருவது தெரியவந்துள்ளது. அவ்வகையில், பஞ்சாப் அரசு, முகநூல் விளம்பரங்களுக்கு மட்டுமமே ரூ.1.83 கோடி செலவிட்டுள்ளது. இதில் 77 சதவீத விளம்பரங்கள் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப் மக்களை இலக்காகக் கொண்ட விளம்பரங்கள் இதில் 19.5 சதவீதம் மட்டும் தான். இதைத்தவிர, ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்காக 1.2 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்ட விளம்பரங்கள் கூட, பஞ்சாபி மொழியில் இல்லாமல் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்ட விளம்பரங்கள் கூட, பஞ்சாபி மொழியில் இல்லாமல் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் 2015ல் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது முதல், விளம்பரங்களுக்கு டெல்லி அரசு செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பரங்களுக்கான செலவினம் 4,273 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களுக்காக ரூ. 488.97 கோடி செலவிட்டுள்ளது.