வீணாக்கப்படும் தடுப்பூசிகள்

தடுப்பூசிகளை வீணாக்குவதை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைக்க சுகாதார அமைச்சகம் போதிய ஆலோசனைகள் தொடர்ந்து அளித்து வரும் போதிலும், பல மாநிலங்கள் தடுப்பூசிகளை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் வீணடிக்கின்றன. தடுப்பூசியை வீணடிக்கும் மாநிலங்களின் வரிசையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் ஜார்கண்ட் சத்தீஸ்கர் மாநிலம் 37.3 சதவீதமும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் 30.2 சதவீதமும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியினர் ஆட்சி செய்யும் தமிழகம் 15.5 சதவீதத்துடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது வேதனையான தகவல். இது தேசிய சராசரியான 6.3 சதவீதத்தைவிட மிகவும் அதிகம்.இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹரியானா அரசு, தடுப்பூசிகள் வீணாவதில் கோவிஷீல்ட் 6 சதவீதம், கோவாக்சின் 10 சதவீதத்துடன் இருந்தது.ஆனால் அது தற்போது முறையே 3.1% மற்றும் 2.4% ஆக குறைந்துள்ளது.அனைத்து தடுப்பூசி திட்டங்களிலும் தடுப்பூசி வீணடிப்பது தவிர்க்க முடியாததுதான்.இருப்பினும், வீணாவதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், சரியான திட்டமிடல், ஒழுங்குமுறை தேவை.இது குறித்து அரசுக்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இருப்பதும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.