தாய்மதம் திரும்பிய வாசிம் ரிஸ்வி

ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி உத்தர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் மஹந்த் யதி நரசிங்கானந்த கிரி முன்னிலையில் முஸ்லிம் மதத்தை விட்டு தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினார்.

இதற்காக அவர் சில நாட்களாக யதி நரசிங்கானந்த கிரியுடன் தொடர்பில் இருந்தார். தஸ்னா கோயிலின் அவர் தீபத்தை ஏற்றி வைக்கும் உரிமையை வழங்கினார் யதி நரசிங்கானந்த கிரி. சில நாட்களுக்கு முன்பு, தான் இறந்தால், தன்னை தகனம் செய்ய வேண்டும், புதைக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார் ரிஸ்வி.

முன்னதாக அவர், குரானில் 26 வசனங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி அவற்றை நீக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தார். அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு அளித்தார். சமீபத்தில் தனது ‘முஹம்மது’ புத்தகத்தை வெளியிட்டார். இதுபோன்ற செயல்பாடுகளால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் இலக்கானார் ரிஸ்வி. அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவரது உடலை கல்லறையில் வைக்க இடம் தரப்படாது என முஸ்லிம் அடிப்படைவாதிகள் அறிவித்தனர்.

ஹிந்து மதத்திற்கு மாறிய பிறகு, ரிஸ்வி, “ஹிந்துக்களை தோற்கடிக்கும் பாரம்பரியத்தை முகலாயர்கள் ஏற்படுத்தினர். ஹிந்துக்களை தோற்கடிக்கும் கட்சிக்கே முஸ்லிம்கள் ஒருமனதாக வாக்களிக்கின்றனர். முஸ்லிம் வாக்காளர்கள் ஹிந்துக்களை தோற்கடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். நான் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், என் தலைக்கு வெகுமதிகளை அறிவிக்கின்றனர். இன்று நான் சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்கிறேன். பாரதத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரு காலத்தில் ஹிந்துக்களே. முஸ்லிம் படையெடுப்பு மற்றும் முகலாய ஆட்சியின்போது அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இனி நான் எனது ஹிந்து மதத்தை வளர்க்கப் பாடுபடுவேன்” என கூறினார்.