உத்தர பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என பலரும் போட்டி போடுகின்றனர். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரான அசாதுதீன் ஒவைசியும் ஒருவர். இதற்காக அவர், சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை சட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அது குறித்த தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், குடியுரிமைச் சட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் உணா்வுகளை ஏற்கெனவே தூண்டியவா் ஓவைஸி. மீண்டும் அதனை அவர் செய்ய முயலக் கூடாது. மீறினால் அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தமுறை சமாஜவாதி கட்சியின் சார்பாக ஒவைசி கலவரத்தைத் தூண்டியது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது உத்தர பிரதேசத்தில் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதைய அரசு மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதில்லை. மாறாக, மாஃபியாக்களின் சட்டவிரோத சொத்துக்களை இந்த அரசு அழித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் அமைதியை சீா்குலைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தார்.