பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மிர் (பி.ஓ.ஜே.கே) பகுதியின் பிரதமர் என்று அழைக்கப்படும் ராஜா பாரூக் ஹைதர், தன் அறிக்கையில், ‘ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தின் அரசியலமைப்பை இம்ரான்கான் தலைமையிலான அரசு வெட்கமின்றி இழிவுபடுத்துகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிர் பிரதேச மக்களை தங்கள் “அடிமைகள்” என்று அவர்கள் அரசாங்கம் கருதுகிறதா? ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரடியாக தலையிடுவதை நிறுத்தாவிட்டால், இஸ்லாமாபாத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். இந்த அறிவிப்பு தற்போது இம்ரான்கானை கலக்கமடையச் செய்துள்ளது.