வ.உ.சி துறைமுகம் ஐ.ஐ.டி ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், பாரதத்தின் 13 பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. வ.உ.சி துறைமுகம் தற்போது, தரவு அறிவியல் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மூலம் துறைமுகத்தின் செயல்பாட்டு, தொழில்நுட்பத்தை மேம்படுத்துதம் திறன் மேம்பாடு மற்றும் வசதியை மேம்படுத்த, ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்து இரண்டு செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் கற்றல் சார்ந்த செயல்பாடுகளை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது கப்பல் திரும்பும் நேரம், துறைமுகத்தில் நிற்கும் நேரம், சரக்கு வகை, தொகுதி, கப்பல் அளவுருக்கள், பெர்த் அளவுருக்கள், ஒதுக்கப்பட்ட கிரேன்கள், டிரக் கேட் நெறிமுறைகள், டிரக் ஒதுக்கீடு போன்றவை உட்பட பல்வேறு துறைமுகத்தின் செயல்பாடுகள், செயல்திறனை ஆய்வு செய்யும். இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் துறைமுகத்தை மேலும் செம்மையாக செயல்படுத்த உதவும்.